Tuesday, 22 May 2012

பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!

Posted Imageவேலூ்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்டுள்ள பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தனர். சிறையிலேயே இவர்கள் மற்ற கைதிகளுடன் சேர்ந்து தேர்வு எழுதியிருந்தனர்.
இந்த நிலையில் பேரறிவாளன் சிறப்பான முறையில் மதிப்பெண்கள் வாங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அவர் மொத்தம் 1096 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
நன்றி தற்ஸ்தமிழ்.

No comments:

Post a Comment