3 படம் வெளியாகி, ஏகப்பட்ட சர்ச்சைகளும் எழுந்து முடிந்து ஓய்ந்து விட்டது. சில சர்ச்சைகள் ஸ்ருதியை முன்வைத்தும் ஓடிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் 3 படம் குறித்தும், ஐஸ்வர்யா குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் ஸ்ருதி.
அவர் கூறுகையில், 3 படத்தில் பணியாற்றும்போது தனுஷ், ஐஸ்வர்யா, நான் மூவருமே ஒருவரையொருவர் தொழில் ரீதியாக அணுகுவது என்ற முடிவு செய்துகொண்டோம். இதனால் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரவில்லை.
தொடக்க காலத்தில் ஐஸ்வர்யா மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அவர் இயக்கும் முதல் படம். எப்படி கையாளப்போகிறாரோ என்று எண்ணினேன். முதல்நாள் ஷூட்டிங்கில் அவர் பணியாற்றியதை பார்த்தபிறகு அவர் மீதான சந்தேகம் தீர்ந்தது. ஒரு படைப்பாளியாக அவரை ஏற்றுக்கொண்டேன்.
இப்படத்தில் பள்ளி மாணவி, மனைவி, விதவை என 3 விதமான தோற்றத்தில் நடிக்க வேண்டி இருந்தது. நடிப்புக்கு வாய்ப்பு இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நான் காதல் வலையில் விழுந்துவிட்டதாக கூறுகிறார்கள். எனக்கேற்ற ஒருவரை தேர்ந்தெடுத்தால் அதை முதலில் எனது தந்தையிடம் சொல்வேன். இப்போதைக்கு காதல் செய்ய நேரமில்லை என்றார் ஸ்ருதி.
No comments:
Post a Comment