சில தினங்களுக்கு முன் மும்பை வான்கடே மைதானத்தில் குடித்துவிட்டு தகராறு செய்தார் என்ற குற்றச்சாட்டில் 5 ஆண்டு தடைக்குள்ளான அவர், இப்போது பொது இடத்தில் புகைப் பிடித்த குற்றத்தில் சிக்கியுள்ளார்.
ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஐபிஎல் போட்டியின்போது ஷாருக்கான் புகைப்பிடித்தது விடியோவில் பதிவானது. தொலைக்காட்சிகளிலும் அது வெளியானது.
இதுகுறித்து ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஆனந்த் சிங் என்பவர் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பாக அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று ஷாருக்கானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணை மே 26-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அது தெரிந்தும் ஷாரூக்கான் புகைப் பிடித்துள்ளது, அவரது சமூக அக்கறையின்மையைக் காட்டுகிறது என விமர்சனம் கிளம்பியுள்ளது.
No comments:
Post a Comment