ஐந்தாவது ஐ.பி.எல். தொடரில் “பிளேஒவ் சுற்றில் விளையாடும் அதிர்ஷ்டசம் தற்போதைய சாம்பியனான சென்னை சுப்ப கிங்ஸ் அணிக்கு தேடி வந்தது. இந்தத் தொடரில் “நடப்புச் சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சுப்ப கிங்ஸ் அணி 16 போட்டியில் 8 வெற்றி, 7 தோல்வி உட்பட 17 புள்ளிகள் பெற்றிருந்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. சென்னை அணி “பிளேஒவ்’ சுற்றுக்கு முன்னேற மற்ற போட்டிகளின் முடிவை எதிர்நோக்கிக் காத்திருந்தது.
ஐ.பி.எல். போட்டியில் இரண்டு முறை சாம்பியனான சென்னை சுப்ப கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோற்றது. இதனால் சென்னை அணி 17 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலிருந்தது. ஆனால், மற்ற அணிகளுக்கு எஞ்சிய ஆட்டங்கள் இருந்ததால் சென்னையின் அடுத்த சுற்று வாய்ப்பு “அம்பேல்’ தான் என்று அனைவரும் கருதினார்கள்.
ஆனால், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் சென்னை அணி அரை இறுதிக்குள் நுழைய மயிரிழை வாய்ப்புள்ளது என்று சென்னை ரசிகர்கள் ஏங்கிய மட்டுமன்றி புலம்பவும் பிரார்த்திக்கவும் ஆரம்பித்தனர். அவர்களின் எண்ணம் ஈடேறும் வகையில் ஒவ்வொரு நாளும் சென்னைக்கு சாதகமாக ஒவ்வொரு அதிசயமும் நடந்தது.
அரை இறுதி வாய்ப்பிலிருந்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, டெக்கான் அணியிடம் முதல் நாளில் தோற்றது. மறுநாளில் இந்த வாய்ப்பில் நீடித்த மற்றொரு அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டெல்லியிடம் சரணடைந்து சருகானது. அடுத்ததாக சென்னை அணிக்கு இருந்த ஒரே முட்டுக்கட்டையான பெங்களூர் அணியும் டெக்கானிடம் மடிந்தது. இந்த 3 அணிகளின் வீழ்ச்சியே சென்னை அணி அரை இறுதிக்கு நுழைய அச்சாணியாக அமைந்தது.
சென்னை (+0.100), பெங்களூர் (0.022) அணிகள் தலா 17 புள்ளிகள் பெற்றிருந்த போதிலும் ஓட்ட வீத அடிப்படையில் சென்னை அணி “பிளேஒவ்’ சுற்றுக்கு முன்னேறியது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் டெக்கான் அணி தான் சென்னை அணிக்கு அரை இறுதி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது எனலாம். ஆரம்பத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசியாக இருந்த டெக்கானின் இறுதிக் கட்ட எழுச்சியே சென்னை அணியின் முன்னேற்றத்துக்கு படிக்கட்டாக அமைந்தது. சென்னைக்குப் போட்டியாக இரு அணியையும் வீழ்த்தியது டெக்கானே. மொத்தத்தில் அதிர்ஷ்டம் வாய்ந்த அணி சென்னை என்று அனைவரும் வாயைப்பிளக்கின்றனர்.

No comments:
Post a Comment