Monday, 21 May 2012

உலக செஸ் - 7வது சுற்றில் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி

ர‌ஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்து வரு‌ம் உலக செ‌ஸ் போ‌ட்டி‌யி‌ன் 7வது சு‌ற்று ஆ‌ட்ட‌‌த்‌தி‌ல் இந்திய கிராண்ட்மாஸ்டர் ‌வி‌ஸ்வநாத‌ன் ஆனந்த், இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் போரிஸ் ஜெல்பான்டிட‌ம் அ‌த‌ி‌ர்‌ச்‌சி தோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர்.

போ‌‌ட்டிக‌ள் டிரா ஆன ‌நிலை‌யி‌ல் நேற்று நடந்த 7வது சுற்று ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய ஆனந்த் 38வது காய் நகர்த்தலுக்கு பிறகு அதிர்ச்சி தோல்வி கண்டார்.

12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஆனந்த் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். மற்ற ஆட்டங்கள் அனைத்தும் டிராவில் முடிந்து இருந்தன. 7வது சுற்று முடிவில் போரிஸ் ஜெல்பான்ட் 4-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.

No comments:

Post a Comment