Monday, 21 May 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: ரஜினி மன்றத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மனுத்தாக்கல்செய்ய முடிவு

புதுக்கோட்டை, மே.21: புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் ரஜினிகாந்த் மன்றத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் இன்று மனுத்தாக்கல் செய்யவந்தார். எனினும் அவர் தேர்தல் செலவுக் கணக்குகளை பராமரிக்க புதிதாக வங்கிக் கணக்கு தொடங்காமல் வந்ததால் வங்கிக் கணக்கு தொடங்கிவிட்டு அதுகுறித்த ஆவணங்களோடு வருமாறு அவரை தேர்தல் அதிகாரி திருப்பி அனுப்பினார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரஜினிக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும், அவருடைய அனுமதி இல்லாமல் ரஜினி மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக ஸ்ரீதர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment