Wednesday 6 June 2012

ரஜினியின் கோச்சடையான் - படப்பிடிப்பு முடிந்தது... போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரம்!

Rajini S Kochadaiyaan Shooting Over ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் ‘கோச்சடையான்‘ படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. லண்டனில் 20 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. பின்னர் திருவனந்தபுரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அங்கு உள்ள சித்ராஞ்சலி மற்றும் மோகன்லால் ஸ்டூடியோக்களில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.

கிராபிக்ஸ் பணிகளில் ஒரு பகுதியையும் இங்கு நடத்தின். உண்மையில் இந்தப் பணிகள் லண்டனில் நடந்திருக்க வேண்டும். ஆதி மற்றும் தீபிகோ படுகோனுக்கு விசா கிடைக்க தாமதமானால், அந்தக் காட்சிகள் கேரளாவில் எடுக்கப்பட்டன.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஹாங்காங்கில் நடத்தி முடித்துள்ளார் சௌந்தர்யா. தற்போது டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், ரீ-ரிக்கார்டிங் பணிகள் நடந்து வருகின்றன.

லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாங்காங் ஸ்டூடியோக்களில் ஒரே நேரத்தில் இப்பணிகள் நடந்து வருவதாக படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.

படத்தை வெளியிடுவதற்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். இந்த வருடம் இறுதிக்குள் படம் வெளியாகி விடும் என்றும் அவர் கூறினார்.

ஜப்பான், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. இதுபோல் பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.

No comments:

Post a Comment