Thursday, 24 May 2012

மூட்டையைக் கட்டி வை என்று மெசேஜ் அனுப்பியிருந்தார் பொல்லார்டு: பிராவோ போடும் புது குண்டு

Dhoni Was The Game Changer Harbhajan பெங்களூர்: நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் அதிர்ஷ்டவசமாக அடுத்த சுற்றில் உள்ளே நுழைந்து வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பிராவோவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்டு அனுப்பிய ஒரு செல்போன் மெசேஜ் இப்போது அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

நேற்றைய போட்டி பற்றி கருத்து தெரிவித்த பிராவோ, 2 நாட்களுக்கு முன்பு பொல்லார்டு எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில் என்னை பேக்கப் செய்து வைத்துக் கொள்.. மூட்டை முடிச்சை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போக தயராக இரு என்று அதில் கூறியிருந்தார். அதற்கு நேற்று எங்கள் பாணியில் பதில் சொல்லியிருக்கிறோம் என்றார் அவர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன்சிங் கூறுகையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அபாரமாக ஆடியது. ஒரு சாம்பியன் அணி எப்படி ஆடவேண்டுமோ அப்படித்தான் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஆடியது. அதிலும் டோனிதான் ஆட்டத்தின் வெற்றியை எங்களிடமிருந்து பறித்தவர். அவர் 20 பந்துகளில் 51 ரன்களை அடித்ததுதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதேபோல் நானும் வந்தவேகத்திலேயே ஆட்டமிழந்ததும் ஒரு பாதகம்தான். டோனி எப்பவுமே ஒரு போட்டியின் போக்கையே மாற்றக் கூடியவர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்றார் அவர்.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் டோனி கூறுகையில், நேற்றைய போட்டியைப் பொறுத்தவரை பத்ரி மற்றும் ஹசிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பத்ரி பிரமாதமாக பேட்டிங் செய்தார். அதன் பிறகு நானும் பிராவோவும் நன்றாகவே விளையாடினோம் என்றார் அவர்.

No comments:

Post a Comment