Thursday, 24 May 2012

கம்பிரால் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தலையெழுத்து மாறியது- அக்ரம்


புனே: கேப்டன் கெளதம் கம்பிரின் தலைமையில் செயல்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் மாற்றத்தை சந்தித்து முன்னேற்றம் கண்டுள்ளது என்று அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஐபிஎல் தொடர்களில் அதிக முன்னேற்றம் இல்லாமல் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த ஆண்டு முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரின் துவக்க ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

2008 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6வது இடத்தை பிடித்தது. அப்போது அணியின் கேப்டனாக செளரவ் கங்குலி இருந்தார். 2009ல் கங்குலியின் தலைமையில் மீண்டும் களமிறங்கி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

கடந்த 2010ல் மீண்டும் 6வது இடத்திற்கும், கடந்த ஆண்டு (2011) தட்டுத்தடுமாறி 4வது இடத்திற்கும் முன்னேறியது. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கெளதம் கம்பிர் தலைமையில் இந்தாண்டு களமிறங்கியது. இந்த ஆண்டு துவக்கம் முதலே சிறப்பாக ஆடி, தற்போது இறுதிப் போட்டியில் முதல் முறையாக நுழைந்துள்ளது.

இந்த நிலையில் கேப்டன் கம்பிரின் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் மாற்றத்தை கண்டு, முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணி வீரர்களுக்கு இடையே ஒருமைப்பாடும், அன்பும் அதிகமாக உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அணியின் சிறந்த கேப்டன் மற்றும் உற்காசம் கொண்ட உரிமையாளர் இருப்பது தான் முக்கிய காரணம்.

இந்த ஆண்டு மைதானங்களின் தன்மைகளை சரியாக புரிந்து கொண்டு போட்டிகளில் களமிறங்கினோம். அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும், ஒருவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment