Friday, 4 May 2012

ஹர்பஜன் சிங் சிறப்பான பந்து வீச்சால் வெற்றி பெற்றோம்: மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங்

சிறப்பான பந்து வீச்சால் வெற்றி பெற்றோம்: மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங்புனேயில் நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிக பட்சமாக பிராங்ளின் 25 ரன்னும், தெண்டுல்கர் 34 ரன்னும் எடுத்தனர்.
 
புனே அணியில் மன்ஹாஸ் மட்டுமே 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள். தோல்வி பற்றி புனே கேப்டன் கங்குலி கூறியதாவது:-
 
எங்களுக்கு வெற்றிக்கு இலக்கு 120 ரன் நிர்ணயிக்கப்பட்டது. இதை எளிதில் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்து விட்டோம். 17-வது ஓவரில் நான் அவுட் ஆனது அதிர்ச்சியான ஒன்று. இது எளிதான விக்கெட் அல்ல. பந்து மட்டைக்கு நேராக வராமல் சென்றுவிட்டது. அப்போதும்கூட 120 ரன் இலக்கை எட்டிவிடலாம் என்று இருந்தோம்.
 
முன் கூட்டியே விக்கெட்டுகள் சரிந்தது தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் நான் அவுட் ஆனதுதான் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
அதே சமயம் மும்பை அணியின் வெற்றியை கேப்டன் ஹர்பஜன்சிங் சக வீரர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார்.
 
வெற்றி களிப்பில் அவர் கூறியதாவது:-
 
புனே 'பிட்ச்' குறைவான தாழ்ந்த 'பிட்ச்'. இதில் பந்துகளை அடிப்பது கடினம். இதனால் பிட்ச் எங்களுக்கு சாதகமாக திரும்பியது. பந்து வீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்து வீசினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது மும்பை வீரர் மலிங்காவுக்கு வழங்கப்பட்டது. அவர் கூறுகையில், பந்து வீச்சில் விக்கெட்டை வீழ்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பயிற்சியின் போது எப்படி செயல் பட்டேனோ அதை அப்படியே மைதானத்தில் வெளிப்படுத்தினேன்.
 
எனது பந்து வீச்சும், பீல்டிங்கும் நன்றாக இருந்ததாக நினைக்கிறேன் என்றார். 

No comments:

Post a Comment