Monday, 21 May 2012

ஐ.பி.எல். லில் இருந்து ஓய்வு


என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் இறுதிப் போட்டியில் விளையாடினேன் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் கிங்ஸ் லெவன் பச்சாப் அணியின் அணித்தலைவருமான அடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியே தனது தொழில் ரீதியான கிரிக்கெட் வாழ்வின் இறுதிப் போட்டியாகக் கருதுவதாகத் தெரிவித்த அடம் கில்கிறிஸ்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முழுநேரப் பயிற்சியாளர் பதவி தரப்படுமாயின் அப்பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் அணித் தலைவராகவும் பயிற்சியாளராகவும் செயற்பட்டதை தான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்ததாகத் தெரிவித்தார்.
இத்தொடரில் பெரும்பாலான போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாத அவர் ஆரம்பத்தில் விளையாடிய போட்டிகளின் பின்பு இறுதி இரண்டு போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.
இறுதி இரண்டு போட்டிகளில் விளையாடியதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அவர், எனினும் முன்னர் காணப்பட்ட அளவுக்கு ஆர்வம் இப்போதிருப்பதாக உணரவில்லை என்றும் அதன் காரணமாக போட்டிகளில் விளையாடும் திட்டங்களைத் தான் கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அடம் கில்கிறிஸ்ட் 2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு தலைமை தாங்கியதோடு அவ்வாண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியன் பட்டமும் வென்றிருந்தது. 2011 ஆம் ஆண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment