Thursday, 3 May 2012

கடைசி 5 ஓவரில் ரன் குவிக்காததால் தோற்றோம்: பெங்களூர் கேப்டன் வெட்டோரி

கடைசி 5 ஓவரில் ரன் குவிக்காததால் தோற்றோம்: பெங்களூர் கேப்டன் வெட்டோரிபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தி பழி தீர்த்து கொண்டது.
 
இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணி தற்காலிக கேப்டன் டேவிட் ஹஸ்ஸி கூறியதாவது:-
 
பரபரப்பான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் இந்த வெற்றி கிடைத்தது. ஆனாலும் அது வெற்றிதான். இதன் மூலம் எங்களது நம்பிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக சிறப்பாக ஆடினோம். தற்போது பெங்களூர் அணிக்கு எதிராக திறமையை வெளிப்படுத்தி உள்ளோம். இதனால் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 
அடுத்து மொகாலியில் ஆடுகிறோம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சிறப்பாக விளையாட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
 
தோல்வி குறித்து பெங்களூர் அணி கேப்டன் வெட்டோரி கூறியதாவது:-
 
கடைசி 5 ஓவர் இரு அணிகளுக்குமே நல்ல விறுவிறுப்பாக அமைந்தது. விக்கெட்டுகள் சரிந்ததால் அதிக நெருக்கடி ஏற்பட்டது. கிறிஸ் கெய்ல், வீராட் கோலி சிறப்பாக ஆடினார்கள். ஆனால் கடைசி 5 ஓவரில் ரன்களை குவிக்க இயலவில்லை. 30 ரன்கள் மட்டுமே எடுத்தோம். கூடுதலாக ரன் எடுத்து இருக்க வேண்டும். இதனால்தான் தோல்வி அடைந்தோம்.
 
இவ்வாறு வெட்டோரி கூறினார்.
 
பெங்களூர் அணி 5-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 11-வது ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்சை 6-ந்தேதி எதிர்கொள்கிறது. பஞ்சாப் அணி 5-ந்தேதி ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.

No comments:

Post a Comment