சென்னை, மே.- 3 - தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதி வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி துவங்கி 30ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7.61 லட்சம் மாணவமாணவியர் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இதைத் தெடர்ந்து பிளஸ் 2 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் மே மாதம் 2-ம் தேதி முடிவடையும் என்றும், இதையடுத்து மே 12-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணி இன்னும் முடியவில்லை. இதனால் தேர்வு முடிவுகள் மே 2-வது வாரத்திற்கு பதிலாக இறுதி வாரத்தில் தான் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது மதிப்பெண்களை மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்யும் பணிகள் தான் நடந்து வருகிறது. இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகுதான் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment