Thursday, 3 May 2012

சச்சினுக்கு எம்.பி. பதவி தேவையில்லை - அண்ணா ஹசாரே!

ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு பதில் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவிப்பதே முறையானதாகும் என்று ஊழல் எதிர்ப்பு போராட்டக்காரரும் காந்திய வாதியுமான அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

பிரபல காந்தியவாதி அன்னாஹசாரே ஊழலை ஒழிக்க வலுவான லோக் ஆயுக்தா சட்டம் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். மக்களிடம் லோக் ஆயுக்தா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 

அந்த பயணத்துக்கிடையே அவுரங்கா பாத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது இதனை தெரிவித்தார்:

தெண்டுல்கருக்கு மேல்- சபை எம்.பி. பதவி கொடுத்திருப்பதாக தகவல் வெளியானதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மத்திய அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. 

தெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் நம்ப முடியாத அளவுக்கு சாதனைகள் படைத்தவர். அவரை உரிய முறையில் கவுரவப்படுத்த வேண்டும். பாராளுமன்ற மேல்- சபை எம்.பி. பதவி அவருக்கு தேவை இல்லை. 

டெண்டுல்கருக்கு எம்.பி. பதவி கொடுத்ததற்கு பதில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவித்து இருக்கலாம். அதுதான் பொருத்தமானதாக இருக்கும். 

டெண்டுல்கருக்கு மேல்- சபை எம்.பி. பதவி கொடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியான போது நான் எந்த அளவுக்கு குழப்பம் அடைந்தேனோ, அதே மாதிரி ஏராளமானவர்கள் குழம்பி போனார்கள். பதவி கொடுப்பதை விட விருது கொடுப்பதுதான் டெண்டுல்கருக்கு பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். 

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

No comments:

Post a Comment