மதுரை:மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த பெனிட்டோ, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மீது இந்திய தேசிய கொடியை அவமதிப்பு செய்ததாக மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவை யில் உள்ளது. உலக கோப் பை கிரிக்கெட்டின் போது, சச்சின் டெண்டுல்கர், ஜமைக்காவில் இந்திய தேசிய கொடி வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கை, கத்தியால் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். டெண்டுல்கரின் இந்த செயல், தேசிய கொடி அவமதிப்பாகும். தேசிய கொடி யை அவமதிப்பு செய்ததற்காக, டெண்டுல்கர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை போலீஸ் கமிஷனர், மேலூர் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டது. வெளிநாட்டில் இந்திய தேசிய கொடியை அவமதித்த டெண்டுல்கரை, பிரதமரின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ராஜ்யசபா எம்.பி.யாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த செயல் கண்டிக்கதக்கது. சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பி.யாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும். அவரை ராஜ்யசபாவிற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் அறிக்கை பெறாமல் சச்சின் டெண்டுல்கரை எம்.பி.யாக நியமித்தது தொடர்பாக ராஜ்யசபா துணைத்தலைவர் மற்றும் செயலாளரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு இன்று விசாரணைக்கு வருகிறது. Thursday, 3 May 2012
எம்.பி.யாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் : ஐகோர்ட்டில் வழக்கு
மதுரை:மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த பெனிட்டோ, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மீது இந்திய தேசிய கொடியை அவமதிப்பு செய்ததாக மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவை யில் உள்ளது. உலக கோப் பை கிரிக்கெட்டின் போது, சச்சின் டெண்டுல்கர், ஜமைக்காவில் இந்திய தேசிய கொடி வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கை, கத்தியால் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். டெண்டுல்கரின் இந்த செயல், தேசிய கொடி அவமதிப்பாகும். தேசிய கொடி யை அவமதிப்பு செய்ததற்காக, டெண்டுல்கர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை போலீஸ் கமிஷனர், மேலூர் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டது. வெளிநாட்டில் இந்திய தேசிய கொடியை அவமதித்த டெண்டுல்கரை, பிரதமரின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ராஜ்யசபா எம்.பி.யாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த செயல் கண்டிக்கதக்கது. சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பி.யாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும். அவரை ராஜ்யசபாவிற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் அறிக்கை பெறாமல் சச்சின் டெண்டுல்கரை எம்.பி.யாக நியமித்தது தொடர்பாக ராஜ்யசபா துணைத்தலைவர் மற்றும் செயலாளரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment