1992ம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பாவி பால்காரராக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். அவர்கள் கெமிஸ்ட்ரி அப்போது சூப்பர் ஹிட்டானது. தற்போது அண்ணாமலை படத்தை ரீமேக் செய்கிறார்கள் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபட்டது. மேலும் அதில் ரஜினி ரோலில் நடிக்க விஜய் ஆர்வமாக உள்ளார் என்றும் கூறப்பட்டது.
படத்தை எடுப்பவர்கள் குஷ்பு ரோலில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் ஹன்சிகாவை நடிக்க வைக்க வலியுறுத்தினர் என்று செய்தி வெளியானது. வேலாயுதம் படத்தின் மூலம் விஜய்-ஹன்சிகா ஜோடி வெற்றி ஜோடியாக ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே பேச்சாக கிடக்கிறதே என்று இளைய தளபதி விஜயிடமே கேட்டதற்கு, அண்ணாமலை படத்தை ரீமேக் செய்வது பற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லையே என்றார்.
சரி ஹன்சிகாவிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று சென்றால், எனக்கே இது புது செய்தி. நானே சில இணையதளங்களில் வந்த செய்தியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார்.
யாரப்பா இந்த புரளியைக் கிளப்பிவிட்டது?
No comments:
Post a Comment