தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவானார். ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இன்னும் சில நாட்களில் 50 நாட்களை தொடவிருக்கிறது. இந்த படத்தில் புதுமுக நாயகன் உதயநிதியின் நடிப்பு பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நடித்த முதல் படம் அதுவும் ஹிட்டான படத்தின் நினைவு தனது வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்பதற்காக அவர் படத்தின் முதல் எழுத்துகளான ஓ.கே.ஓ.கே. வை தனது உடலில் பச்சை குத்தியுள்ளார். அவர் ஏற்கனவே தனது மகன் இன்பா மற்றும் மகள் தன்மயா ஆகியோரின் பெயர்களை பச்சை குத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக காதலன், காதலி பெயரை பச்சை குத்துவார்கள். ஏன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நாட்டுபற்று மிகுதியால் நம் தேசியக் கொடியை கையில் பச்சைக் குத்தியுள்ளார். இந்நிலையில் உதயநிதி சற்று வித்தியாசமாக படத்தின் பெயரை பச்சை குத்தியுள்ளார்.
No comments:
Post a Comment