Friday, 4 May 2012

IPL5: அதிரடியாக ஆடி வந்த சுரேஷ் ரெய்னா 34 ரன்களில் அவுட்

After Warriors Chargers Look Upset சென்னை: ஐபிஎல் 5 தொடரில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் துவக்க வீரர் முரளி விஜய்(14) வழக்கம் போல சொற்ப ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 34 ரன்களில் அவுட்டானார்.

11 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் இழந்து 91 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரர் டு பிளசிஸ், கேப்டன் டோணி ஜோடி களத்தில் ஆடி வருகிறது.

ஐபிஎல் 5 தொடரில் இன்று சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றது.

டெக்கான் சார்ஜர்ஸ்:

ஐபிஎல் 5 தொடரில் துவக்கம் முதலே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த டெக்கான் சார்ஜர்ஸ், கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியை 2 முறை வீழ்த்தியது. எனினும் புள்ளிப்பட்டியில் 5 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பெற்றுள்ளது. எனவே இனிவரும் அனைத்து போட்டிகளிலும் டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றிப் பெற்றால் மட்டுமே, இத்தொடரின் அடுத்த சுற்றை குறித்து யோசிக்கலாம்.

கேப்டன் சங்கக்காரா, கேமரூன் ஒயிட் ஜோடியின் பொறுப்பான ஆட்டமே, புனே வாரியர்ஸூக்கு எதிரான வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. அதேபோல இன்றும் இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், சென்னை சூப்பர் கிங்ஸூக்கு சிக்கலை ஏற்படுத்த முடியும். மேலும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால், டெக்கான் சார்ஜர்ஸ் இன்று வெற்றிப் பெற வாய்ப்புள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் 2 முறை மண்ணை கவ்வி வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், 4 போட்டிகளில் வெற்றியும், ஒன்றில் டையும் அடைந்து 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

எனவே இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப் பெற்றால் மட்டுமே, இத்தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பேட்டிங்கில் ஜொலித்த கேப்டன் டோணியும், துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு அரைசதம் கூட கடக்காதது வருத்தம்.

துவக்க வீரராக களமிறங்கும் டுபிளெசிஸ் மட்டுமே அணியில் பொறுப்பாக ஆடி, தொடரில் சிறந்த சராசரி ரன்களை பெற்றுள்ளார். மிடில் ஆடரில் வரும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்காதது வருத்தம். துவக்க வீரராக களமிறங்கும் பத்ரிநாத் பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் ஆறுதல் அளிக்கிறார். அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய மைக்கேல் ஹஸ்ஸி இன்று சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
 
பந்துவீச்சில் இன்று போலிங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்களை வீழ்த்தும் பிராவோ ஆறுதல் அளிக்கிறார். அஸ்வினின் சுழலில் ரன்கள் கொடுத்தாலும் விக்கெட்கள் கிடைக்கிறது.

பேட்டிங்கிற்கு அதிகம் ஒத்துழைக்காத மெதுவான ஆடுகளம் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள சென்னை மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் சாதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment