புனே: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ஐ.பி.எல்.5வது தொடரில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி டேர்ட்வெஇல்ஸ் இழந்துவிட்டது. இருப்பினும் இரண்டாவது குவாலிபையரில் விளையாடும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என்றே நம்புவதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2008-ம் ஆண்டிலிருந்து தற்போதுதான் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறக் கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆனால் அது நடக்காமல் போனது.
இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள சேவாக், எங்கள் அணி சரியாக விளையாடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 160 ரன்கள் என்பது சேஸிங் செய்யக் கூடியதுதான். தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்ததாலும் கடைசி சில ஓவர்களை சரியாக விளையாடாததாலுமே தோற்க நேரிட்டது. என்னைப் பொறுத்தவரையில் வருண் ஆரோன் மற்றும் உமேஷ் யாதவ் நன்றாக பந்து வீசினர் என்றார்.
இருப்பினும் தற்போதும் கூட எங்களுக்கு நம்பிக்கை குறைந்துபோய்விடவில்லை. நாங்கள் எல்லாம் முடிந்துவிட்டது என ரிலாக்ஸ் ஆக இருக்க விரும்பவிலை. நடப்பு தொடரின் இரண்டாவது குவாலிபையரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றே நம்புகிறோம் என்றார் சேவாக்.
No comments:
Post a Comment