Saturday, 26 May 2012

ப்ரீத்தி ஜிந்தாவும், ஷில்பா ஷெட்டியும் எனக்கு அண்ணி மாதிரி... ஸ்ரீசாந்த்


ப்ரீத்தி ஜிந்தாவும், ஷில்பா ஷெட்டியும் எனக்கு அண்ணி மாதிரி என்று கூறியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.
Shilpa Is Like Bhabhi Me Sreesanth
முன்பு ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தவர் ஸ்ரீசாந்த். அப்போதுதான் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வந்த ஹர்பஜன் சிங்கிடம் கன்னத்தில் பளார் என அடி வாங்கி கிரவுண்டிலேயே ஓவென கதறிக்கதறி அழுது பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

பஞ்சாப் அணியின் ஓனராக இருப்பவர் ப்ரீத்தி ஜிந்தா. ராஜஸ்தான் அணியின் ஓனர்களில் ஒருவர் ஷில்பா ஷெட்டி. இவர்கள் இருவருக்கும் உங்களுக்குமிடையிலான உறவு குறித்து சொல்லுங்களேன் என்று அவரிடம் கேட்டபோது,

இருவரின் பெரிய ரசிகன் நான். பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நான் ஷில்பா ஷெட்டியின் பெரிய விசிறியாக இருந்தேன். அதேபோல ப்ரீத்தி ஜிந்தாவும் என்னைக் கவர்ந்தார். ஆனால் தற்போது இருவரும் எனக்கு அண்ணி போல.

எனது அறையில் ப்ரீத்தி ஜிந்தாவின் பெரிய படம் இன்றும் கூட உள்ளது. ஆனால் அதை உடனே மாற்றி ஷில்பா பாபியின் படத்தை வைக்க வேண்டும் என்றார் சிரித்தபடி.

ஸ்ரீசாந்த்துக்கு கிரிக்கெட், ஆட்டம், பாட்டு ஆகியவற்றைத் தாண்டி படம் வரைவதிலும் நல்ல ஆர்வம் உண்டாம். அவ்வப்போது சூப்பராக வரைவராம். விரைவில் அண்ணி ஷில்பாவையும், அவருடைய மகனையும் படம் வரைய காத்திருக்கிறாராம்.

சரி ஸ்ரீசாந்த், அண்ணன் ராஜ் குந்த்ராவுக்கு மகன் பிறந்திருக்கிறானே, போய்ப் பார்த்து அண்ணியிடம் நலம் விசாரித்தீர்களா...?

No comments:

Post a Comment