
பிரபல சினிமா தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காமகோடி நகரில் ஸ்ரீவிஸ்வரூப ஷீரடி சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி முடித்துள்ளார். ஆகம விதிகளின்படி அமைந்துள்ள இந்த கோவிலில் 9 அடி உயர விஸ்வரூப சாய்பாபா படமும், அனுகுயாவின் கதையை எடுத்துரைக்கும் தத்தோத்திரா படமும் உள்ளது.
இந்த கோவிலின் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தையையொட்டி ஷீரடியில் இருந்து வந்திருந்த சிறப்பு அர்ச்சகர்கள் தாங்கள் கொண்டு வந்த ஷீரடி நீரால் சிறப்பு பூஜைகள் செய்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் கலந்துகொள்ள வந்த நடிகர் அஜீத் குமாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் சாய்பாபாவை பயபக்தியுடன் கும்பிட்டார்.
இந்த கும்பாபிஷேகத்தில் விஷ்ணு வர்த்தன், மனோஜ் குமார், தயாரிப்பாளர்கள் சஞ்சய் வாத்வா, டி.என்.எஸ்., கதாசிரியர் சுபா, சுரேஷ் சந்திரா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அண்மையில் தான் நடிகர் அர்ஜுன் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment