Friday, 4 May 2012

விஜய் அசத்தல் ஆட்டம் ... பாராட்டிய அக்ஷய் குமார்!

Akshay Kumar Praises Vijay Dance தமிழ் சினிமாவில் ஸ்டைலுக்கும் மாஸூக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால், டான்ஸுக்கு இளையதளபதி விஜய்தான்.

அதிலும் அவரது சமீபத்திய படங்களைப் பார்த்தவர்களுக்கு, விஜய்யின் நடனத் திறமையும், அதை அவர் எத்தனை லாவகமாகக் கையாள்கிறார் என்பதும் புரிந்திருக்கும்.

சக நடிகர்கள் அனைவருமே, நடனத்தில் விஜய்யை மிஞ்ச முடியாது என்பார்கள் மேடைகளில்.

இத்தனை நாளும் தமிழ் நடிகர்கள்தான் விஜயின் நடனத்துக்கு ரசிகர்களாக இருந்தனர். இப்போது இந்தி முன்னணி நடிகர்களும் விஜய் நடனத்தை பாராட்டித் தள்ளிவிட்டனர்.

பிரபு தேவா இயக்கும் பாலிவுட் படமான ரவுடி ரத்தோரில் (தமிழில் வந்த சிறுத்தையின் ரீமேக்) ஒரு பாடலுக்கு ஹீரோ அக்ஷய் குமார், இயக்குநர் பிரபு தேவாவுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார் விஜய்.

நடன இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை, இன்னும் மேம்படுத்தி அழகாக ஆடிய விஜய்யை ஆச்சரியமாகப் பார்த்தாராம் அக்ஷய் குமாரும், உடனிருந்த சக நடிகர்களும்.

சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது!

No comments:

Post a Comment