Saturday, 26 May 2012

தட்டுத் தடுமாறினாலும் அதிரடியாக இறுதிக்குள் நுழைந்த சென்னை சூப்பர்கிங்ஸ்!


Ipl 5 Chennai Super Kings Road The Final சென்னை: நம்ப முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இறுதிப் போட்டிக்கு சென்னை தகுதி பெற்றது அதன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தாலும் பலரும் இந்த அணி இறுதிக்குள் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.

ஆரம்பத்திலிருந்தே தடுமாறி ஆடி வந்த ஒரே முன்னணி சென்னைதான். இதற்கு நேர் மாறாக கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகியவை அதிரடியாக ஆடி வந்தன. இவற்றில் ஏதாவது இரண்டுதான் இறுதிப் போட்டிக்கு வரும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தடாலடியாக உள்ளே புகுந்து விட்டது சென்னை.

இதுதாண்டா சென்னை என்பதை நிரூபிக்கும் வகையில் கடைசி நேரத்தில் அபாரமான வெற்றிகளைக் குவித்து நாங்க எப்பவுமே கிங்குதான் என்பதை நிரூபித்து விட்டனர் டோணி அன் கோவினர்.

சென்னை சூப்பர்கிங்ஸ் நடப்புத் தொடரில் கடந்து வந்த பாதையை ஒரு சுற்று சுற்றி வருவோம்....

லீக் போட்டி 1

நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது சென்னை சூப்பர்கிங்ஸ் அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 7-ந் தேதி மோதியது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

போட்டி- 2

விசாகப்பட்டினத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் ரூ10 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ஜடேஜாவின் அபார பந்துவீச்சில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வென்று நடப்புத் தொடரில் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டி 3

டெல்லியில் வலுவான டெல்லி டேர்டெவில்ஸை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 110 ரன்களைத்தான் குவிக்க முடிந்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

போட்டி 4

சென்னையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ஏப்ரல் 12- ந்தேதி எதிர்கொண்டது. அபி மோர்கலின் அபாரத்தால் கடைசி பந்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வென்றது. இதில் மோர்கல் 7 பந்தில் 28 ரன்களை எடுத்திருந்தார்.

போட்டி -5

புனேயில் புனே வாரியர்ஸ் அணியுடன் ஏப்ரல் 14-ந் தேதி மோதியதில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.

போட்டி 6

ஏப்ரல் 19-ந் தேதியன்று சென்னை சேப்பாகக்த்தில் நடைபெற்ற போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பழிதீர்த்தது சென்னை சூப்பர்கிங்ஸ்

போட்டி 7

சென்னையில் ஏப்ரல் 21-ந் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது சூப்பர் கிங்ஸ் அணி. பிளெஸ்ஸின் அபார ஆட்டத்தினால் 7 விக்கெட் வித்தியாத்தில் சூப்பர்கிங்ஸ் வென்றது.

போட்டி 8

பெங்களூரில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ஏப்ரல் 25-ந் தேதி சென்னை சூப்பர்கிங்ஸ் அணி எதிர்கொண்டது. மழையால் ஆட்டம் தடைபட்டது.

போட்டி 9

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை சென்னையில் ஏப்ரல் 28-ந் தேதி சூப்பர்கிங்ஸ் எதிர்கொண்டது. இந்த போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது

போட்டி 10

சென்னையில் ஏப்ரல் 30-ந் தேதி வலுவான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆனால் கொல்கத்தா அணியே வென்றது.

போட்டி 11

சென்னையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை மீண்டும் மே 4-ந் தேதியன்று சென்னை அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியே வென்றது.

போட்டி 12

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் மும்பை வென்றது

போட்டி 13

ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை சூப்பர்கிங்ஸ் எதிர்கொண்டது. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வென்றது

போட்டி 14

நடப்புத் தொடரில் தமது வலுவை வெளிப்படுத்தி வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை அணி சொந்த மண்ணில் எதிர்கொண்டது. சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி வென்றது.

போட்டி 15

கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி பெற்றது

போட்டி 16

தரம்சாலாவில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியின் முடிவில் 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருந்தாலும் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை தகுதி பெறுமா என்ற கேள்வியுடன் நின்று கொண்டிருந்தது. பினன்ர் பெங்களூர் அணி டெக்கான் அணியிடம் வீழ்ந்த நிலையில் தகுதி சுற்றுக்குபோனது.

சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்வெவில்ஸை துவம்சம் செய்து ஒருவழியாக இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர்கிங்ஸ் உள்ளே நுழைந்துவிட்டது. ஒரு போட்டியிலும் சோபிக்காத முரளி விஜய் நேற்று புயல் போல ஆடி சதமடித்ததோடு தனது அணியையும் இறுதிப் போட்டிக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை எதிர்கொள்ள இருக்கிறது .ஹாட்ரிக் சாதனையாக ஐ.பி.எல். கோப்பையை சென்னை வெல்லுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு

No comments:

Post a Comment