
தனுஷ்-ஸ்ருதி ஹாசன் நடித்த 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் எவ்வளவு பிரபலமானது என்பது நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. நண்டு, சுண்டு முதல் அனைவரும் முணுமுணுக்கிறார்கள்.
அந்த பாடலை தனுஷ் பாடியிருந்தாலும் அதற்கு இசையமைத்தவர் புதுமுக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். '3' தான் அவருக்கு முதல் படம் என்றாலும் தனது இசையால் அனைவரையும் கவர்ந்துவிட்டார். யாரு இந்த பையன் அனிருத் என்று அனைவரும் கேட்கும்படி செய்துவிட்டார்.
3 பட இசை ஹிட்டானதையடுத்து தற்போது அனிருத்துக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டில் இருந்து அவரை அழைக்கிறார்களாம். தற்போது அவர் கையில் 2 பாலிவுட் படங்கள் உள்பட 4 படங்கள் உள்ளது என்றால் கொலவெறியின் தாக்கத்தைப் பார்த்துக்கொள்ளுங்களேன்.
அனிருத் லதா ரஜினிகாந்தின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் காட்டில் மழை தான்...!
No comments:
Post a Comment