Friday, 4 May 2012

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் - வழக்கு எண் 18/9 உள்பட 3 படங்கள் ரிலீஸ்

Friday New Releases இந்த வெள்ளிக்கிழமை 3 தமிழ்ப் படங்களும் சில டப்பிங் படங்களும் தமிழகத்தில் வெளியாகின்றன.

கடந்த நான்கு வாரங்களாக தமிழ் சினிமாவில் ஒரே படம்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளது. அது ஒரு கல் ஒரு கண்ணாடி. அதற்கு சவாலாக இதுவரை எந்தப் படமும் வரவில்லை.

ஆனால் இந்த வாரம் அந்தக் குறை நீங்கிவிடும் என்று தெரிகிறது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள வழக்கு எண் 18/9 பட்ஜெட்டில் மிகச் சிறிய படம் என்றாலும், அதன் தரமும் படைப்பு நேர்த்தியும் தமிழ் சினிமாவுக்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகும் மற்றும் இரு படங்கள் காந்தம் மற்றும் பரமகுரு. இவற்றுடன் ஜக்கம்மா மற்றும் க்ளிக் 3 படங்கள் தமிழில் டப்பாகி வெளியிடப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான ஆங்கிலப் படம் ஹ்யூகோ 3 டியில் வெளியாகியுள்ளது. ஜன்னத் என்ற இந்திப் படமும், மோகன்லால் நடித்த மலையாளப் படம் கிராண்ட் மாஸ்டரும் இன்று வெளியாகியுள்ளன.

இதில் ஆச்சர்யம், கன்னடப் படமான அன்னா பாண்ட் சென்னையில் வெளியாகி உள்ளதுதான். நான்கு அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment