ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமை யிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் ஒரு அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். சென்னை அணி 11 ஆட்டத்தில் 5-ல் வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. 11 புள்ளிகளுடன் உள்ளது. எஞ்சியுள்ள 5 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டியில் வெல்ல வேண்டும். 3 ஆட்டத்தில் வென்றால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து வாய்ப்பு அமையும். மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் 10 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்று உள்ளது. எஞ்சியுள்ள 6 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றால் அந்த அணி அரை இறுதிக்கு நுழையும். சென்னை அணியை மும்பை ஏற்கனவே வீழ்த்தி இருக்கிறது. தற்போது உள்ளூரில் விளையாடுவதால் மும்பை இந்தியன்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணி 10 ஆட்டத்தில் 4 வெற்றியுடன் 9 புள்ளிகளுடனும், டெக்கான் 10 ஆட்டத்தில் 2 வெற்றியுடன் 5 புள்ளிகளும் பெற்றுள்ளன. பெங்களூர் அணி அரை இறுதி வாய்ப்பை பெற வெற்றி பெற வேண்டிய கட்டாயமாகும். டெக்கான் அணி வென்றாலும் பலன் இல்லை. வாய்ப்பை இழந்த டெக்கான் அணி சில ஆட்டங்களில் வென்றால் அது பல அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment