சங்ககரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி கட்டாக்கில் நேற்று நடந்த ஆட்டத்தில் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியை 13 ரன்னில் வென்றது. டெக்கான் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே புனே வாரியர்சை வென்று இருந்தது. இந்தப்போட்டியின் போது புனே வாரியர்ஸ் அணி மெதுவாக பந்து வீசியது தெரியவந்தது. குறிப்பிட்ட நேரத்தில் புனே அணி 1? ஓவர் குறைவாக வீசி இருந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். நடத்தை விதிப்படி புனே வாரியர்ஸ் கேப்டன் கங்குலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்து வீச்சுக்காக அபராதம் விதிக்கப்பட்ட 2-வது கேப்டன் கங்குலி ஆவார். இதற்கு முன்பு டெக்கான் கேப்டன் சங்ககராவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த 26-ந்தேதி புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் 1 ஓவர் குறைவாக வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment