
மதுரை ஆதீனத்தின் 293 வது குருமகா சன்னிதானமாக முடிசூட்டிக் கொள்ளும் நித்யானந்தா பரமாச்சாரிய தேசிகருக்கு மதுரை ஆதீனத்தின் 292 வது மகாசன்னிதானமான அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் கிரீடம் சூட்டி பட்டம் சூட்டினார். பட்டம் சூட்டிக் கொண்ட நித்தியானந்த தேசிகர் 3 உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டார். மதுரை ஆதீனத்தை உலகளாவிய ஆன்மீக நிறுவனமாக மாற்றுவேன். மதுரை ஆதீனம் உலகிற்கு ஆற்றிய சமூக ஆன்மீக பணிகளுக்காக ஒரு சிறு காணிக்கையாக ரூ. ஒரு கோடியை மதுரை ஆதீனத்திற்கு வழங்குகிறேன். மதுரை ஆதீனம் ஆற்றிய சேவைகளை தொடர்ந்து செய்வேன். அதை மேம்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்.
மதுரை மீனாட்சி, சொக்கநாதர், திருஞானசம்பந்தர் மூவரையும் நினைந்து அவர்கள் சாட்சியாக இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இந்து பாரம்பரியத்தையும், சைவ சித்தாந்த சம்பிராதயத்தையும் வாழும் மதமாகவும், கொண்டாடும் மதமாகவும் உலகம் முழுவதும் உயிர்ப்போடு வைத்திருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு 3 உறுதிமொழிகளை நித்தியானந்தா ஏற்றுக் கொண்டார். இதன் பின்னர் நித்யானந்த தேசிகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இந்த நாள் உலக வரலாற்றில் மிக முக்கியமான தெய்வீகமான நாள். நம்முடைய இந்து மதத்தில் பாரம்பரியமிக்க மடாதிபதிகள் வாழும் அவதாரங்களை அடையாளம் கண்டு அவர்களை தேர்ந்தெடுத்து அடுத்த வாரிசாக முடிசூட்டிக் கொள்வது வழக்கம். இதற்கு பல்வேறு ஆதாரங்களும் உள்ளன. குஜராத்தின் பழமையான மடத்தின் மடாதிபதி சுவாமி நாராயணனை அவதார சக்தியாக அங்கீகரித்து தமக்கு அடுத்த வாரிசாக அங்கீகரித்தார். இன்று அந்த ஆன்மீக நிறுவனம் உலகின் மிகப் பெரிய செழிப்பான இந்து மதத்திற்கு அடையாளமாக திகழ்ந்து சிறப்பு மிக்க ஆன்மீக சேவைகளை ஆற்றி வருகிறது.
292 வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் முன்னிலையில் அவரது உத்தரவின் பேரில் இந்த பொறுப்பை எடுத்து இந்த உறுதிமொழிகளை எடுத்து கொள்வதை பெரும்பேறாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment