சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். அதே பகுதியைச் சேர்நத் ராஜ்குமார் என்பவர் இவரது நண்பர் ஆவார். அடிக்கடி தனது நண்பரைப் பார்க்க வருவது வழக்கம். ராஜ்குமார் வட்டிக்குப் பணம் கொடுப்பவர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ராஜ்குமாரிடம் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து ரவிக்குமாரிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ராஜ்குமார். இதையடுத்து கோபம் பெருக்கெடுக்க, ராஜ்குமாரை தனது பைக்கில் அமர வைத்துக் கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருபவர்களைப் பார்க்க கிளம்பினார் ரவிக்குமார்.
நேற்று நள்ளிரவு இவர்கள் போயுளள்ளனர். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்ரி வந்தா ரமேஷ், ஜானி, தேவா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் இருவரையும் பைக்கோடு வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இதை எதிர்பாராத ரவிக்குமாரும், ராஜ்குமாரும் தலை தெறிக்க ஓடினர்.
அப்போது ரவிக்குமாரை அக்கும்பல் மடக்கிப் பிடித்து சரமாரியாக வெட்டி வீழ்த்தியது. இதில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் பலியானார். ராஜ்குமார் சிக்காமல் தப்பி ஓடி உயிர் தப்பினார்.
நண்பருக்காக பஞ்சாயத்துப் பேசப் போய் கடைசியி்ல ரவிக்குமார் பரிதாபமாக பலியாகி விட்டார். கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்க வந்தபோது ரவிக்குமாரை விட்டு விட்டு ராஜ்குமார் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment