Tuesday 8 May 2012

முத‌லிட‌த்தை ‌பிடி‌த்தது கொல்கத்தா - சேவ‌ா‌க் அ‌ணி ‌வீ‌ழ்‌‌ந்தது

டெல்லியில் நேற்‌றிரவு நடந்த ஐ.‌பி.எ‌ல். போ‌ட்டி‌யி‌ன் 51வது லீக் ஆட்டத்தில் பு‌ள்‌ளி ப‌ட்டிய‌லி‌ல் முத‌லிட‌த்த‌ி‌ல் உ‌ள்ள சேவா‌க் தலைமை‌யிலான டெல்லி டேர்டெவில்ஸ் அ‌ணியை க‌ம்‌பீ‌ர் தலைமை‌யிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 ‌வி‌க்க‌‌ெ‌‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் தோ‌ற்கடி‌த்தது முத‌லிட‌த்தை ‌பிடி‌த்தது.

டாஸ் வெ‌ன்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ேவாக் ஆகியோர் களம் புகு‌ந்தன‌ர். அ‌திரடியாக ‌விளையாடிய இ‌ந்த ஜோடி 4வது ஓவரில் பிரிந்தது. காலிஸ் பந்தில் பவுண்டரி விரட்டிய ேவாக் (23) அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனா‌ர்.

அணியின் ஸ்கோர் 49 ரன்னாக இருந்த போது ம‌ற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் காலிஸ் பந்து வீச்சில் பவுண்டரி அடித்த மறுபந்தில் விக்கெட் கீப்பர் பிரன்டன் மெக்கல்லத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். வார்னர் 19 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 21 ரன் எடுத்தார்.

அடுத்து ராஸ் டெய்லர், மஹேலா ஜெயவர்த்தனேவுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு ரன்னாக இருக்கையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச்சில் இருந்து தப்பிய ஜெயவர்த்தனே 27 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் கம்பீரால் ரன் அவுட் ஆனா‌‌ர். இதையடு‌த்து கள‌ம் இற‌ங்‌கிய இர்பான் ப‌த்தான் அதிரடியாக ‌விளையாடி அ‌ணி‌யி‌‌ன் எ‌ண்‌ணி‌க்கையை உய‌ர்‌த்‌தினா‌ர். மந்தமாக ஆடிய ராஸ் டெய்லர் 27 பந்துகளில் 16 ரன் எடுத்த நிலையில் சாங்வான் பந்து வீச்சில் ரஜத் பாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட யோகேஷ் நாகர் (10) பிரெட்லீ பந்து வீச்சில் போல்டு ஆனார்.

சுனில் நரின் வீசிய கடைசி ஓவரில் மொத்தம் 4 விக்கெட்டுகள் சாய்ந்தது. நமன் ஓஜா (21) மனோஜ்திவாரியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 22 ப‌ந்துக‌ளி‌ல் 36 ர‌‌ன் எடு‌த்த இர்பான் ப‌த்தான் ‌ஸ்ட‌‌ம்‌பி‌ங் ஆனா‌ர். 4 பவுண்டரி, ஒரு சிக்ச‌ர் ‌விளா‌சினா‌ர் ப‌த்தா‌ன். ‌பி‌ன்ன‌ர் வ‌ந்த மோர்னே மோர்கல் (0), வருண் ஆரோன் (1 ரன்) ஆகியோர் ரன் அவுட் முறை‌யி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர்.

20 ஓவர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் காலிஸ், சுனில் நரின் தலா 2 விக்கெட்டும், பிரெட்லீ, சாங்வான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றின‌ர்.

154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

தொடக்க ஆட்டக்காரர்களாக கள‌ம் இற‌‌ங்‌கிய பிரன்டன் மெக்கல்லம் - கேப்டன் கவுதம் கம்பீர் ஜோடி 7 ஓவர்களில் 68 ரன்னாக இருந்த போது பிரிந்தது. கம்பீர் 21 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன் சேர்த்தார். அணியின் ஸ்கோர் 15.1 ஓவர்களில் 128 ரன்னாக இருந்த போது கா‌லி‌ஸ் (30) அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே மெக்கல்லமும் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். 44 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 56 ரன்க‌ள் எடு‌த்தா‌ர் மெ‌க்க‌ல்ல‌ம்.

அவசரப்பட்டு ஆடிய மனோஜ்திவாரி (8) மோர்னே மோர்கல் பந்து வீச்சில் இர்பான் ப‌த்தானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 18.4 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ூசுப் பதான் 7 ரன்னுடனும், தாஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 6வது வெற்றியை ருசித்துள்ள கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

11வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி சந்தித்த 3வது தோல்வி இதுவாகும். 8 வெற்றியுடன் கடந்த சில நாட்களாக முதலிடத்தில் இருந்த அந்த அணி தற்போது 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment