Tuesday, 8 May 2012

திரிஷாவைத் திருப்திப்படுத்த தமன்னா நீக்கம்!

Lisa Hayden Endrendrum Punnagai என்றென்றும் புன்னகை படத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்ய த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவருக்கு பதிலாக பிரபல மாடல் லிசா ஹேடன் நடிக்கிறார்.

ஜீவாவுடன் த்ரிஷா முதன் முதலாக ஜோடி சேரும் படம் என்றென்றும் புன்னகை. அதில் இன்னொரு ஹீரோயின் தேவை என்று நினைத்த இயக்குனர் அகமது, தமன்னாவை தேர்வு செய்துள்ளார். இந்த செய்தி த்ரிஷா காதுக்கு எட்டவே, இந்த படத்தில் ஒரு ஹீரோயின் என்று சொல்லிவிட்டு இப்போ தமன்னாவை ஒப்பந்தம் செய்ய நினைத்தால் எப்படி. படத்தில் எனது முக்கியத்துவம் குறைந்துவிடுமே என்று மல்லுக்கு நின்றுள்ளார்.

த்ரிஷாவின் கோபத்தைப் பார்த்த இயக்குனர் சற்றே இறங்கி வந்து சமாதானம் செய்துள்ளார். சரி, சரி இன்னொரு ஹீரோயின் போட்டால் அவர் தமிழ், தெலுங்கு அல்லாத மொழிகளில் நடிப்பவராக இருக்க வேண்டும் என்று த்ரிஷா கன்டிஷன் போட்டுள்ளார். வேறு வழியின்றி இயக்குனர் தமன்னாவை எடுக்காமல் பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான லிசா ஹேடனை ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதன் பிறகே த்ரிஷா கூலாகியுள்ளாராம். த்ரிஷாவின் செல்லப்பெயர் ஹனியாம். ஆனால் அவரை அவ்வாறு அழைக்க சிலருக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment