Tuesday, 8 May 2012

தீபிகாவுடன் எனக்கு நெருக்கமான காட்சிகள் வேண்டாமே - மகளுக்கு ரஜினி அட்வைஸ்!

Why Rajinikanth Can T Romance Deepika கோச்சடையான் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகாவுடன் காதல் காட்சிகளை மிக நெருக்கமாக இருக்கும்படி அமைக்க வேண்டாம். அது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக ரஜினி தன் மகளுக்கு அட்வைஸ் பண்ணாராம்.

கோச்சடையான் 3 டி அனிமேஷன் படத்தில் ரஜினியுடன் தீபிகா ஜோடியாக நடித்து வருகிறார்.

படத்தின் ஷூட்டிங் வெகு வேகமாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது பாடல் காட்சிகள் சென்னையில் படமாகி வருகின்றன.

ஒரு பாடல் காட்சியில் ரஜினியும் தீபிகாவும் மிக நெருக்கமாக காதல் செய்வது போல பாட்டுக்கு நடனம் அமைத்த சரோஜ்கான் நடன அசைவுகள் வைத்திருந்தாராம்.

இதனைக் கவனித்த ரஜினி, "இந்த அளவு நெருக்கம் வேண்டாமே," என்று இயக்குநரான தன் மகள் சௌந்தர்யாவிடமும், நடன இயக்குநரிடமும் கேட்டுக் கொண்டாராம்.

தன்னை விட மிக இளம் வயதான தீபிகாவுடன் அத்தனை நெருக்கமாக நடிப்பது சங்கடமாக உள்ளதாகவும், இந்தக் காட்சிகள் கண்ணியமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறும் ரஜினி கூறினாராம்.

இந்தப் பாடல் குறித்து தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறுகையில், "அது உண்மையிலேயே ஒரு பிரில்லியன்ட் பாடல். ரஹ்மான் அத்தனை அருமையாக ட்யூன் கொடுத்துள்ளார். பரத நாட்டியத்துடன் இணைந்த ரொமான்டிக் பாடல். பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் மிக இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

No comments:

Post a Comment