சென்னை: ஐபிஎல் 5 தொடரின் பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நுழைய, கடைசி கட்டத்தில் வீறு கொண்டு எழுந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2 அணிகளை வீழ்த்தியது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்த சென்னை ரசிகர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர்.
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக இந்த ஆண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், துவக்கம் முதலே தோல்வி உடன் துவங்கியது. ஏப்ரல் 4ம் தேதி துவங்கிய ஐபிஎல் 5 தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
அதன்பிறகு சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய பெரும்பாலான போட்டிகளில் தோல்வியை தழுவியது. 16 போட்டிகளின் முடிவில் 17 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4வது இடம் கிடைத்தது. புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை அடையும் அணிகள் மட்டுமே, பிளே ஆப் சுற்றில் நுழைய முடியும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இடங்களில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தோல்வி அடைந்தால் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றில் நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
No comments:
Post a Comment