டெல்லி அணியுடன் (குவாலி பையர்-2-ல்) விளையாடப்போவது சென்னையா?, மும்பையா? என்பது இன்று இரவு (மே 23) தெரியும்.
ஐந்தாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது மிகவும் சிறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 9 அணிகள் பங்கேற்ற இந்த போட்டித்தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
பெங்களூர், பஞ்சாப், ராஜஸ்தான், டெக்கான், புனே ஆகிய அணிகள் முறையே 5 முதல் 9-வது இடங்களை பிடித்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.
பிளே ஆப் சுற்று நேற்று தொடங்கியது. குவாலி பையர்-1 க்கான போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்னில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
பிளே ஆப் சுற்றின் 2-வது ஆட்டமான எலிமினேட்டர் போட்டி பெங்களூரில் இன்று (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி டெல்லியுடன் (குவாலி பையர்-2-ல்) மோதும். இதனால் டெல்லி அணியுடன் மோதுவது சென்னையா?, மும்பையா? என்பது இன்று இரவு தெரியும்.
குவாலி பையர்-2 ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 25ஆம் தேதி நடக்கிறது. இதே போல இறுதிப்போட்டியும் சென்னையில் தான் 27ஆம் தேதி நடக்கிறது.
No comments:
Post a Comment