Saturday, 5 May 2012

மோசமான பீல்டிங்கினால் தோல்வி அடைந்தோம்: டெக்கான் கேப்டன் சங்ககாரா

மோசமான பீல்டிங்கினால் தோல்வி அடைந்தோம்: டெக்கான் கேப்டன் சங்ககாராநடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெக்கானை 10 ரன்னில் வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. தொடக்க வீரர் டு பிளிசிஸ் 42 ரன்னும், கேப்டன் டோனி 34 ரன்னும், ரெய்னா 32 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது.

ஒயிட் 53 பந்தில் 77 ரன் (9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். 19-வது ஓவரில் அவரது ரன்அவுட் டெக்கான் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஹில்பெனாஸ், மார்கெல், ரெய்னா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள். ரெய்னா ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

சேப்பாக்கம் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. கடைசி ஓவர்களில் நிலைத்து நின்று விளையாட எங்களுக்கு சிரமமாக இருந்தது. இதற்கு ஆடுகளமே காரணம். சாம்பியன் 'லீக்' போட்டி நடந்தபோது ஆடுகளம் நன்றாக இருந்தது. பயிற்சியின்போது பொலிஞ்சர் சிறப்பாகவே பந்து வீசினார். ஆனால் அதிகமான நோபால்களை பயிற்சியின்போது வீசினார்.

இதனால்தான் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஹில்பெனாசின் பணி சிறப்பாகவே இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டன் சங்ககாரா கூறியதாவது:-

எங்களது பேட்டிங், பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் பீல்டிங்தான் மோசமாக இருந்தது. மோசமான பீல்டிங்கினால் தோல்வி அடைந்தோம். கேட்சுகளை தவறவிடுவது அடிக்கடி நடக்கிறது. பல ஆட்டங்களில் இப்படி நெருங்கி வந்து தோற்று இருப்பதற்கு இதுதான் காரணம். ஒயிட் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. இளம் வீரர்களுக்கு அவர் சிறந்த முன்னோடியாக திகழ்கிறார். இவ்வாறு சங்ககாரா கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும். 12-வது ஆட்டத்தில் அந்த அணி மும்பை இந்தியன்சை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சந்திக்கிறது. டெக்கான் சார்ஜர்ஸ் 7-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 11-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை நாளை சந்திக்கிறது. 

No comments:

Post a Comment