Friday 4 May 2012

அடுத்த வருஷம் திரிஷாவுக்கு 30 வயது... இன்று 29வது பிறந்த நாள்

Trisha Turns 29 Today நடிகை த்ரிஷா இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதன் மூலம் 'மூத்த' நடிகைகள் வரிசையில் திரிஷாவும் இணைகிறார்.

மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்ற த்ரிஷா பிரஷாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் ஒரு சில சீன்களில் வந்து சென்றார். அதன் பிறகு பிரியதர்ஷனின் லேசா லேசா படம் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து கோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். கோலிவுட் தவிர்த்து அவர் தெலுங்கு படங்களிலும் ஒரு கலக்கு கலக்கியவர். அண்மையில் அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடித்த தம்மு சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

தமிழில் நண்பர் விஷாலுடன் சமர், அடுத்து ஜெயம் ரவியுடன் பூலோகம் மற்றும் என்றென்றும் புன்னகை என்று அவர் பிசியாகவே உள்ளார். சொல்ல மறந்துட்டோம் பிரியதர்ஷனின் கட்டா மீட்டா படம் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் சென்று வந்துள்ளார். இப்படி ஓடி, ஓடி உழைக்கும் த்ரிஷா இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பிறந்தநாள் என்றால் பார்ட்டி இல்லாமலா. அதுவும் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதே பொலிவுடன் இருக்கும் த்ரிஷா பிறந்தநாளுக்கு பார்ட்டி இல்லாமலா? எல்லாம் இருக்காம்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் த்ரிஷா!

No comments:

Post a Comment