Tuesday, 22 May 2012

ஜிஸ்ம் 2ல் நெருக்கமான காட்சிகளில் நடிக்க சன்னி லியோன் கூச்சம்-இயக்குநர் மகேஷ் பட்

Sunny Leone Shy Do Intimate Scenes ஜிஸ்ம் 2 படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆபாச பட நடிகை சன்னி லியோனுக்கு கூச்சமாக இருந்ததாம். இதை அந்தப் படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

கனடாவில், ஆபாச படங்களில் நடித்துப் பிரபலமானவர் சன்னி லியோன். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் இந்தியாவில் பிரபலமானார். இதையடுத்து அவர் பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நெருக்கமான காட்சிகள், படுக்கையறை காட்சிகள் நிறைய உள்ளனவாம்.

படுக்கையறை காட்சிகளில் நடிப்பது சன்னிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால் படுக்கையறை மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க அவருக்கு கூச்சமாக உள்ளதாம். அதிலும், ரந்தீப் ஹூடாவுடனான படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும்போது சன்னி மிகவும் கூச்சப்பட்டார் என்று மகேஷ் பட் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சன்னி மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் என்று எனக்கு தெரியும். அவர் ஆபாச படங்களில் நடிப்பவர் என்பதால் அவருக்கு கூச்சம் இல்லை என்பது அர்த்தம் இல்லை. ரந்தீப்புடன் படுக்கையறை காட்சிகளில் நடிக்கையில் அவர் மிகவும் கூச்சப்பட்டார் என்றார்.

சன்னியும் பெண் தானே...!

No comments:

Post a Comment