Tuesday, 22 May 2012

தேவைக்கு அழைக்கலாம் என்று ஆசிரியைகள் போட்டோவை ஃபேஸ்புக்கில் போட்ட +2 மாணவன்

 2 Student Held Advertising Teacher Call Girls Facebook மதுரை: மாணவி ஒருவர் சரியாக படிக்காததால் அவரைக் கண்டித்த ஆசிரியைகளின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் போட்டு தேவைக்கு அழைக்கலாம் என்று விளம்பரம் செய்த பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்தவர் சந்தியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஆண் நண்பருடன் சேர்ந்து ஊர் சுற்றுவதாகவும், ஒழுங்காக படிப்பதில்லை என்றும் கூறி ஆசிரியை ஒருவர் அவரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தியா அந்த ஆசிரியை பழிவாங்க தீர்மானித்தார். இது குறித்து அதே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் தனது ஆண் நண்பரிடம் தெரிவித்தார். பள்ளி சுற்றுலா சென்றபோது தனது செல்போனில் எடுத்த போட்டோக்களில் தன்னை கண்டித்த ஆசிரியை மற்றும் இன்னொரு ஆசிரியையின் போட்டோக்கள் உள்ளன என்று சந்தியா தெரிவித்துள்ளார்.

உடனே அந்த மாணவன் அந்த 2 ஆசிரியைகளின் போட்டோக்களையும் வாங்கி தேவைக்கு அழைக்கலாம் என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த ஆசிரியைகளின் இமெயில் முகவரிகளையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த மாணவரை நேற்று கைது செய்தனர்.

No comments:

Post a Comment