ஐபிஎல் 5 தொடரில் இன்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
துவக்க வீரராக களமிறங்கிய ஷான் மார்ஷ் அதிரடியாக ஆடினார். 22 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் விளாசிய 32 ரன்கள் எடுத்து அஸ்வினிடம் ரன் அவுட்டானார். அடுத்து வந்த அசார் மகமூது அதிரடியாக 2 சிக்ஸ் அடித்து 18 ரன்களை குவித்தார். ஆனால் பிராவோ வீசிய பந்தில் எல்.பி.டபில்யூவாகி வெளியேறினார்.
2 விக்கெட்கள் சரிந்த நிலையிலும் ஒருபுறம் பொறுப்பாக ஆடிய துவக்க வீரர் மன்தீப் சிங் அரைசதம் கடந்தார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த டேவிட் மில்லர் 19 ரன்களில் டோணியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு வந்த டேவிட் ஹஸ்ஸி, மன்தீப் சிங் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை பொறுமையாக உயர்த்தினார். ஆனால் நீண்டநேரமாக பொறுப்பாக ஆடி வந்த மன்தீப் சிங் 56 ரன்கள் எடுத்து சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஹஸ்ஸியும் 7 ரன்களில் ஏமாற்ற, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்வதில் சரிவு ஏற்பட்டது. இறுதிக்கட்டத்தில் சாவ்லா(0), பியூல் சர்மா(7), நிதின் சைனி(6) என்று வரிசையாக விக்கெட்கள் சரிந்தன.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 156 ரன்களை குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஆல்பி மார்கல் 3 விக்கெட்களும், பிராவோ 2 விக்கெட்களும் வீழ்த்தி, எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.
157 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற வெற்றி இலக்கு உடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, டு பிளசிஸ், பத்ரிநாத் ஜோடி அதிரடி துவக்கம் அளித்தது. 20 பந்துகளில் அதிரடியாக 2 சிக்ஸ், 3 பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த டு பிளசிஸ், அசார் மகமூதின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அடி வந்த பத்ரிநாத்(25) சிக்ஸ் அடிக்க முயன்ற போது கேட்சாகி வெளியேறினார். 2 விக்கெட்கள் இழந்த நிலையில் களமிறங்கிய அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 15 ரன்கள் எடுத்து ஸ்பிம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.
இன்று முன்னதாக களமிறக்கப்பட்ட விரிதிமன் ஷா 6 ரன்களில் ஏமாற்றினார். கேப்டன் டோணி 1 ரன்களில் ஸ்டேமிங் செய்யப்பட்டு வெளியேறினார். சற்றுநேரம் களத்தில் ஜடேஜா 17 ரன்களில் ஹஸ்ஸியிடம் கேட்சாகி அவுட்டானார்.
தோல்விப் பாதையில் சென்று கொண்டிருந்த அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வர பிராவோ கடும் முயற்சியில் ஈடுபட்டார். 2 சிக்ஸ் அடித்து 30 ரன்களை குவித்த பிராவோ கேட்சாகி வெளியேறினார். கடைசி ஓவரில் வெற்றிப் பெற 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த மார்கலும் அவுட்டானார்.
கடைசி வரை போராடிய அஸ்வின்(7), குலசேகரா(5) ஜோடி வெற்றி இலக்கை எட்ட முடியாவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்களில் தோல்வியை தழுவியது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தரப்பில் அசார் மகமூது சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
No comments:
Post a Comment