சிவாஜி என்ற தலைப்பில் ரஜினி படம் நடித்த போதே, எம்ஜிஆர் என்ற தலைப்பைப் பதிவு செய்ய நிறையப் பேர் ஆர்வம் காட்டினர். ஆனால் அரசியல் பிரச்சினை வருமோ என்ற யோசனையில் கொஞ்சம் ஜகா வாங்கினர். ஆனால் சுந்தர் சி மட்டும் அப்படியெல்லாம் யோசிக்காமல் அந்தத் தலைப்பை தனது அடுத்த படத்துக்கு பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் எம்ஜிஆராக நடிக்கப் போகிறவர் விஷால். எம்ஜிஆருக்கும் இந்தப் படத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையாம். ஹீரோவுக்கு இதில் மூன்று வேடங்கள். ஒவ்வொரு கேரக்டர் பெயரின் மதன் முதல் எழுத்துக்கள்தான் (மதன், கஜா, ராஜா) எம்ஜிஆராகிவிட்டதாம்.
படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்கிறார். விஜய் ஆன்டனி இசையமைக்கிறார். சதா ஒரு குத்தாட்டம் போட ஒப்புக் கொண்டுள்ளாராம்.
இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
No comments:
Post a Comment