Sunday, 27 May 2012

நடிகர் சங்கத் தலைவராக மீண்டும் 'செலக்ட்' ஆகிறார் சரத்குமார்!

Sarath Kumar Be Re Elected President Nadigar Sangam சென்னை: நடிகர் சங்கத் தலைவராக 3வது முறையாக நடிகர் சரத்குமாரே தேர்வாகப் போகிறார். அதிமுக ஆதரவுடன், இரட்டை இலை சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக உள்ள அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பதால் மீண்டும் சரத்தே நடிகர் சங்கத் தலைவராகிறார்.

நடிகர் சங்கத் தலைவராக தற்போது 2வது முறையாக பதவியில் நீடித்து வருகிறார் சரத்குமார். முதல் முறைதான் அவரை ஓட்டு் போட்டுத்தேர்ந்தெடுத்தனர். 2 வது முறை போட்டியி்ன்றி அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதையடுத்து ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிறைசூடன் தேர்தல்அதிகாரியாக செயல்படுகிறார்.

கடந்த 23ம் தேதி மனுத் தாக்கல் தொடங்கியது. இதில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகர், செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயக்குமார், கே.என். காளை என பழையவர்களே மீண்டும் மனு செய்தனர்.

வெள்ளிக்கிழையுடன் மனு தாக்கல் முடிந்தது. சனிக்கிழமை பரிசீலனை நடந்தது. இதன் இறுதியில் இந்தப் பதவிகளுக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இதனால் தலைவர், பொருளாளர், செயலாளர், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு மறுபடியும் சரத்குமார், சந்திரசேகர், ராதாரவி, விஜயக்குமார், காளை ஆகியோரே போட்டியின்றி தேர்வாகின்றனர்.

இவர்கள் போக 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 25 பேர் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் வாபஸ் பெற்றால் 24 பேரும் ஒரு மனதாக தேர்வாக முடியும்.

இல்லாவிட்டால் இந்த 24 உறுப்பினர்களுக்கு மட்டும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும்.

சரத்குமார் அதிமுக ஆதரவுடன், இரட்டை இலைச் சின்னத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதிமுக மேலிடத்துடன் நல்ல நட்புடன் இருந்து வருபவர். எனவே அவரது தலைமையிலான அணியையே மீண்டும் பதவியில் அமர்த்தினால் நடிகர் சங்கத்திற்கு நல்லது என்று கருதப்படுவதால் அவர்களையே மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்வதாக தெரிகிறது.

No comments:

Post a Comment