புனே: நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் முதல் சென்னை அடுத்த சுற்றுக்கு நுழையுமா என்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-டெக்கன் சார்ஜர்ஸ் மோதும் போட்டி முடிவில் தெரிந்துவிடும். நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் இன்று கடைசி லீக் போட்டி நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் டெக்கன் சார்ஜர்ஸ் அணியும் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று மோதுகின்றன.
இன்றைய போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்றால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுப் போட்டிக்குள்ளேயே நுழைய முடியும்.
பெங்களூர் அணியும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் 17 புள்ளிகளுடன் இருக்கின்றன. டெக்கன் சார்ஜர்ஸ் அணி 7 புள்ளிகளுடன் இருக்கிறது.
இந்நிலையில் பெங்களூருக்கு இழப்பு ஏற்பட்டால்தான் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு வாய்ப்பு ஏற்படும்.
புள்ளிபட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிவிட்ட நிலையில் தம்மைவிட வலுகுறைந்த டெக்கன் சார்ஜர்ஸ் அணியை வென்றாக வேண்டிய நிலையில் இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கவே செய்யும்.
டெல்லி-கொல்கத்தா
டெல்லி டேர்டெவில்ஸ் 16 ஆட்டத்தில் 11 வெற்றி, 5 தோல்வியுடன் 22 புள்ளி கள் பெற்று புள்ளிகள் பட்டிய லில் முதல் இடத்தை பிடித்தது. பிளேஆப் சுற்றின் முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. நாளை மறுநாள் புனேயில் நடைபெறுகிறது.
இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறது.
இன்றைய போட்டியில் வெல்லும் அணிதான் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மற்றொரு பிளே ஆப் போட்டியில் மோதும். இப்போட்டி 23ந் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.
டெல்லி- கொல்கத்தா இடையேயான போட்டியில் தோற்கும் அணி 23-ந் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இது சென்னையில் 25-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
No comments:
Post a Comment