
அஜீத் குமார் அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்தில் தான் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக இரு நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு யாருமில்லை அரவிந்த்சாமியும், பிரித்விராஜும் தான்.
மணிரத்னத்தால் திரையுலகிற்கு வந்த அரவிந்த்சாமி பிசினஸில் பிசியாகி படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள் அல்லவா. அதற்கேற்ப படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் ஒரு ரவுண்ட் வர முடிவு செய்துள்ளார்.
மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். இந்நிலையில் தான் அவருக்கு விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 30ம் தேதி மும்பையில் துவங்குகிறது.
No comments:
Post a Comment