Saturday, 19 May 2012

சென்னை தொழிலதிபருடன் நிச்சயதார்த்தமா? - அசின் விளக்கம்

Asin Denies Marriage Reports Aid0136இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவேன் என்று அசின் கூறினார்.


நடிகை அசின் பாலிவுட்டில் போன பிறகு, தனது மவுசை இழந்துவிட்டார். அவரைப் பற்றி கண்டபடி செய்திகளும் வர ஆரம்பித்துவிட்டன. அதற்கேற்ப அவருக்கு வாய்ப்புகளும் குறைந்துவிட்டன.

லேட்டஸ்டாக, அவரைப் பற்றிய செய்தி... அவருக்கும் ஒரு சென்னை தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்பதுதான்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அசின், "இந்த திருமண செய்தி எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. நான் இன்னும் சினிமாவில் நிறைய சாதிக்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இதுபோல கல்யாண செய்தி வருவது கவலையாக உள்ளது.

எனக்கு 26 வயதுதான் ஆகிறது. அடுத்த 7 வருஷத்துக்கு கல்யாணம் பற்றி நினைக்கமாட்டேன். இந்தியில் எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நான்தான் படங்களை குறைத்துக் கொண்டேன்.

நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் மட்டும் நடித்தால் போதும் என்று நினைக்கிறேன், வருங்காலத்தில் திரையுலகில் முதல் இடத்தை பிடிப்பேன்.

இப்போது ஒரு படத்துக்காக உடலை ஸ்லிம்மாக்கி வருகிறேன். அதுபற்றி சீக்கிரம் சொல்வேன்," என்றார்.

No comments:

Post a Comment