Wednesday, 2 May 2012

கமலின் விஸ்வரூபத்தை வெளியிடுகறது ஜெயா பிக்சர்ஸ்?

Kamalகடந்த ஆட்சியில் சன் டிவி, திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கென்று சன் பிக்சர்ஸ் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இந்த நிறுவனம் குறித்து ஆஹா ஓஹோ என்று பாராட்டிய சினிமாக்காரர்கள், நாளாக ஆக குத்துதே குடையுதே என புலம்ப ஆரம்பித்தனர்.

ஆட்சி மாற்றம் வந்ததும் சன் பிக்சர்ஸ் அடங்கிப் போக ஆரம்பித்தது. இப்போது ஜெயா டிவி முறை போலிருக்கிறது.

விரைவில் சினிமாவுக்கென்று ஜெயா பிக்சர்ஸ் எனும் பேனரில் படங்களை தயாரிக்க, விநியோகிக்க ஜெயா டிவி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான வேலைகளிலும் மும்முரமாக இறங்கியுள்ளதாம்.

இந்த சேனல் ஏற்கெனவே விஜய் நடித்த வேலாயுதம் படத்தை ஆஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டதாகக் கூறுகிறார்கள். அந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் பெற்றது. அடுத்து கமல் நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் தியேட்டர் மற்றும் டிவி உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளதாக விஷயமறிந்த வட்டத்தில் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment