Tuesday, 22 May 2012

சினேகா - பிரசன்னாவுக்கு ரஜினி தந்த திருமணப் பரிசு!

Superstar Rajini Gift Sneha Prasanna புதுமணத் தம்பதிகள் சினேகா - பிரசன்னாவை தன் வீட்டுக்கே வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கடந்த மே 11-ம் தேதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாக சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தனர் சினேகாவும் பிரசன்னாவும். ஆனால் ரஜினியால் இந்த திருமணம் அல்லது அதன் பிறகு திரையுலகினருக்காக நடத்தப்பட்ட பிரத்தியேக வரவேற்பில் பங்கேற்க முடியவில்லை. கோச்சடையான் பணிகளில் அவர் பிஸியாக இருந்தார். 

இந்த நிலையில் சினேகாவையும் பிரசன்னாவையும் தன் வீட்டுக்கே வரவழைத்து அவர்களுக்கு திருமணப் பரிசு வழங்கி, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஸ்ரீராகவேந்திரர் உருவப்படத்தின் ஆயில் பெயின்டிங்கை இருவருக்கும் அன்புப் பரிசாக அளித்த ரஜினி, இருவருக்கும் திருமண வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. சூப்பர் ஸ்டாரின் அன்புப் பரிசோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம்," என்றார்.

No comments:

Post a Comment