Saturday, 26 May 2012

இயக்குனர் பிறந்தநாள் விழாவுக்கு 65 உடைகள் மாற்றிய முன்னணி நடிகை

Top Actress Dabbles With 65 Designer Outfits Kjo Bash பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் பார்ட்டிக்கு போட்டு செல்ல முன்னணி நடிகை ஒருவர் 65 டிசைனர் ஆடைகளை ட்ரை செய்தாராம்.

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பெரிய இயக்குனரின் பிறந்தநாள் என்றால் பார்ட்டி இல்லாமலா, நிச்சயம் உண்டு. அந்த பார்ட்டியைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. கரண் தனது பிறந்தநாள் பார்ட்டிக்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என ஏராளமானோரை அழைத்துள்ளார்.

பெரிய ஆட்கள் வரும் பார்ட்டிக்கு அழகாக வர வேண்டும் என்று அனைவரும் நினைப்பது சகஜம் தான். ஆனால் ஒரு நடிகை கொஞ்சம் ஓவரா ட்ரை பண்ணியிருக்கார். படங்களில் காதல் வந்ததும் காதலனையோ, காதலியையோ சந்திக்க செல்லும்போது ஹீரோ அல்லது ஹீரோயின் பீரோவில் உள்ள அனைத்து ஆடைகளையும் போட்டு பார்த்து இது சரியில்லை, அது சரியில்லை என்று தூக்கிப் போடுவார்கள். பிறகு ஒரு வழியாக ஒரு ஆடையை தேர்வு செய்து உடுத்துவார்கள்.

அதே போன்று ஒரு முன்னணி நடிகை கரண் பார்ட்டிக்கு அழகாக போக வேண்டும் என்பதற்காக 65 டிசைனர் ஆடைகளை போட்டுப் பார்த்தாராம். அந்த நடிகை யாரென்று கேட்காதீர்கள் எங்களுக்கும் அவர்கள் பெயரை சொல்லவில்லை. தெரிய வந்தால் நிச்சயம் சொல்கிறோம்.

இந்த பார்ட்டிக்கு கரண் நடிகை பிரியங்கா சோப்ராவையும் அழைத்துள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் பிரியங்கா தனது நெருங்கிய நண்பர் ஷாருக்குடன் மிகவும் நெருங்கியதால் கரண் கடுப்பாகிவிட்டார். அதையெல்லாம் மறந்துவிட்டு தான் தற்போது பிரியங்காவை பார்ட்டிக்கு அழைத்துள்ளார்.

No comments:

Post a Comment