Thursday, 3 May 2012

ஐபிஎல் 5: புனே வாரியர்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்-1 ரன்னில் 'திரில்' வெற்றி

Will Warriors Seal Double Win Over புனே: ஐபிஎல் 5 தொடரில் இன்றைய போட்டியில் 121 ரன்களை சேஸ் செய்து வந்த புனே வாரியர்ஸ் கடைசி பந்து வரை போராடியும், இறுதியில் 1 ரன்களில் தோல்வியை தழுவியது. புனே வாரியர்ஸ் அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் மித்துன் கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடி 42 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

ஐபிஎல் 5 தொடரில் இன்று புனேயில் நடைபெற்ற போட்டியில் புனே வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் சிறப்பான துவக்கத்தை பெற்றாலும் அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.

துவக்க வீரர்களான களமிறங்கிய சச்சின், ஜேம்ஸ் பிராங்க்ளின் ஜோடி அதிரடியாக ஆடியது. ஆனால் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 25 ரன்கள் எடுத்த பிராங்க்ளின் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரோஹித் சர்மா 3 ரன்களில் ரன் அவுட்டானார்.

2 விக்கெட்கள் இழந்த நிலையில் சச்சின் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். ஆனால் சச்சின் 34 ரன்கள் எடுத்த நிலையில் நெஹ்ராவின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சச்சினுடன் ஜோடி சேர்ந்து ஆடி வந்த ராபின் பீட்டர்சன் 13 ரன்களில் கங்குலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ராயுடு 1 ரன் மட்டுமே எடுத்து போல்டானார்.

அணியின் மோசமான ரன் குவிப்பிற்கு இடையே கேப்டன் ஹர்பஜன் சிங், பேரேரா ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகினர். சிறிதுநேரம் நிலைத்து ஆடிய மலிங்கா 1 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரன் ஓடிய ஓஜா ரன் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து 18 ரன்கள் எடுத்திருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 120 ரன்களில் சுருண்டனர்.

121 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய புனே வாரியர்ஸ் அணி துவக்க அதிரடியாக இருந்தது. ஆனால் துவக்க வீரர் ராபின் உத்தப்பா 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 18 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபில்யூ ஆனார். ஹர்பஜன் சிங்கின் பந்தில் மற்றொரு துவக்க வீரர் ஜெஸ்ஸி ரைடர் 7 ரன்களில் அவுட்டானார்.
  Read:  In English
அடுத்து வந்த மைக்கேல் கிளார்க் 14 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார். ஸ்டீபன் ஸ்மித் 2 ரன்களில் போல்டானார். அதன்பிறகு கேப்டன் கங்குலியுடன் ஜோடி சேர்ந்த மித்துன் அதிரடியாக ஆடினார். ஆனால் கேப்டன் கங்குலி 16 ரன்கள் எடுத்த மலிங்காவின் வேகத்தில் போல்டானார்.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் புனே வாரியார்ஸ் பேட்ஸ்மேன்கள் 10 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் 1 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றிப் பெற்றது. கடைசி வரை புனே வாரியர்ஸ் அணியின் வெற்றிக்காக பாடுபட்ட மித்துன் 42 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன் சிங், மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு உதவினர்.

No comments:

Post a Comment