Wednesday, 2 May 2012

சகுனி'யின் விலை ரூ. 22 கோடி?


saguni sold for rs 22 cr கார்த்தி நடித்த சகுனி படத்தின் விநியோக உரிமையை ரூ. 22 கோடிக்கு விற்று விட்டார்களாம்.இதுதான் கோலிவுட் முழுக்க ஒரு பேச்சாக கிடக்கிறது.

கார்த்தி, பிரனீதா நடித்துள்ள படம் சகுனி. இப்படத்தை மே மாதம் 11ம் தேதிக்கு திரைக்குக் கொண்டு வரத்த திட்டமிட்டுள்ளனராம். இந்த நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையை ரூ. 22 கோடிக்கு விற்றுள்ளதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

கார்த்தி நடித்த எந்தப் படமும் இப்படி ஒரு பெரிய விலைக்கு இதுவரை போனதாக வரலாறே இல்லை. இந்த நிலையில் சகுனியை மட்டும் இவ்வளவு பெரிய விலைக்கு எப்படி விற்றார்கள் என்பதே பெரிய பேச்சாக உள்ளது.

இப்படத்தை தயாரித்தது டிரீம் வேரியர்ஸ் நிறுவனம். படத்தை வாங்கியிருப்பது வேந்திரன் பிலிம்ஸ் மதன். சங்கர்தயாள் சர்மாவின் அறிமுக இயக்கத்தில் சகுனி உருவாகியிருப்பது நினைவிருக்கலாம். ஜிவிபிரகாஷ் இசையமைத்துள்ளார். சந்தானம் காமெடி பண்ணியுள்ளார்.

இவ்ளோ பெரிய ரேட்டுக்கு 'ஒர்த்'தானதுதானாசகுனி... படம் வரட்டும் பார்க்கலாம்...!

No comments:

Post a Comment