Tuesday, 24 April 2012

அஜீத்தைப் பற்றி எப்படிச் சொல்றதுன்னே தெரியலே... உருகும் புருனா!

Bruna Abdullahஅஜீத் குமாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்று பில்லா 2 நாயகிகளில் ஒருவரான புருனா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பி்ல்லா 2 படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் புருனா அப்துல்லா. இவர் ஒரு அரபிய-பிரேசில் கூட்டுத் தயாரிப்பு. ஹைட்டும், கச்சிதமான வெயிட்டும் புருனாவை படு கம்பீரமாக காட்டுகிறது.

அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையில்,

அஜீத் குமாருடன் நடித்தது ஒரு சிறப்பான அனுபவம். அதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாமல் இயல்பாகப் பழகுவார். அமைதியானவர். அவரோட வேலை செய்வது ரொம்ப ஈசி. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவர் எனக்கு தமிழில் பேச கற்றுக் கொடுத்தார். அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்றார்.

கோலிவுட்டில் இருநாட்டு கூட்டுத் தயாரிப்பில் பிறந்த நடிகைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. புருனா அப்துல்லா, நதாலியா கௌர், தற்போது நர்கிஸ் பக்ரி என்று பட்டியல் நீள்கிறது

No comments:

Post a Comment